

சையத் முஷ்டாக் அலி டி20 கோப்பை தொடரின் எலைட் குரூப் ஏ பிரிவு ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் மிசோரம் அணியை வீழ்த்தியது. மும்பையில் உள்ள சரத் பவார் கிரிக்கெட் அகாடமி மைதானத்தில் நவம்பர் 22ஆம் தேதி நடைபெற்ற 67-வது லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 224 ரன்கள் குவித்தது.
முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணிக்கு அபிஜீத் தோமர் 5 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். ரோஹன் ராஜ்பார் 10 பந்துகளில் 19 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதன்பிறகு களமிறங்கிய குனால் சிங் ரத்தோர் பொறுப்புடன் விளையாடியதுடன் அதிரடியையும் வெளிப்படுத்தினார்.
அவர் 60 பந்துகளில் 116 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதில் 8 பவுண்டரிகள், 8 சிக்சர்கள் அடங்கும். அவரது ஸ்டிரைக் ரேட் 193.33 ஆகும். மனவ் சுதார் 8 ரன்களிலும், கார்த்திக் சர்மா 15 பந்துகளில் 23 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். மறுமுனையில் முகுல் சவுதரி 12 பந்துகளில் 28 ரன்கள் விளாசினார். மகிபால் லோம்ரோர் 11 பந்துகளில் 23 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இதனால் ராஜஸ்தான் அணி 224 ரன்கள் என்ற வலுவான இலக்கை நிர்ணயித்தது
225 ரன்கள் என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய மிசோரம் அணியும் அதிரடியாக விளையாட முயற்சித்தது. அந்த அணியின் தொடக்க வீரர் ஜோசப் லால்தன்குமா 18 பந்துகளில் 22 ரன்கள் எடுத்தார். கேப்டன் ஜெஹு ஆண்டர்சன் 6 பந்துகளில் 5 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
பின்னர் களமிறங்கிய சின்மய் சுதார் சிறப்பாக விளையாடி 25 பந்துகளில் 48 ரன்கள் குவித்தார். இதில் 5 பவுண்டரிகள், 2 சிக்சர்கள் அடங்கும். கியாங்டே வான்ரோட்லிங்கா 25 பந்துகளில் 34 ரன்களும், பி. லால்நுன்பேலா 26 பந்துகளில் 23 ரன்களும் எடுத்தனர். இருப்பினும், ராஜஸ்தான் அணியின் பந்துவீச்சைச் சமாளித்து இலக்கை எட்ட முடியவில்லை.
இறுதியில் மிஸோரம் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் ராஜஸ்தான் அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது