சையத் முஷ்டாக் அலி கோப்பை: பீகார் அணியை 99 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய தமிழ்நாடு

15.5 ஓவர்களில் 139 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
தமிழ்நாடு அணி
Published on: 

இந்தூர்,

சையத் முஷ்டாக் அலி டி20 கோப்பை கிரிக்கெட் தொடரில் பீகார் அணியை 99 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தமிழ்நாடு அணி அபார வெற்றி பெற்றது.

தமிழ்நாடு - பீகார்

சையத் முஷ்டாக் அலி கோப்பை தொடரின் எலைட் குரூப் 'பி' பிரிவில் நடைபெற்ற ஆட்டத்தில் தமிழ்நாடு - பீகார் அணிகள் மோதின. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தமிழ்நாடு அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 238 ரன்கள் குவித்தது.

தமிழ்நாடு அணியில் அமித் சத்விக் 53 ரன்களும், சச்சின் 83 ரன்களும், ஆண்ட்ரே சித்தார்த் 34 ரன்களும், ரிதிக் ஈஸ்வரன் 31 ரன்களும் எடுத்தனர்.

இதையடுத்து 239 ரன்கள் என்ற கடின இலக்கை நோக்கி களமிறங்கிய பீகார் அணி, தமிழ்நாடு அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 15.5 ஓவர்களில் 139 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

அபார வெற்றி

பீகார் அணியில் அல்டமிஷ் அஷ்ரப் 45 ரன்களும், ஆஷிஷ் குமார் 33 ரன்களும், பியூஷ் சிங் 27 ரன்களும் எடுத்தனர்.

தமிழ்நாடு அணியின் சார்பில் சாய் கிஷோர், மணிமாறன் சித்தார்த் தலா 3 விக்கெட்டுகளும், ஆர். ராஜ்குமார் 2 விக்கெட்டுகளும், அதிசயராஜ் டேவிட்சன், குர்ஜப்னீத் சிங் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

இதன் மூலம் தமிழ்நாடு அணி 99 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

X