டி20 கிரிக்கெட்: வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியா தரப்பில் அதிகபட்சமாக டிம் டேவிட் 37 பந்தில் 102 ரன்கள் அடித்தார்.
Image Courtesy: @ICC
Image Courtesy: @ICC
Published on

கயானா,

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடி வருகிறது. இதில் முதல் இரு ஆட்டங்களில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரில் 2-0 என முன்னிலையில் இருந்தது. இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான 2வது டி20 போட்டி நேற்ற் (இந்திய நேரப்படி இன்று) நடைபெற்றது.

இதில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 20 ஓவரில் 4 விக்கெட்டை இழந்து 214 ரன்கள் குவித்தது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அதிகபட்சமாக ஷாய் ஹோப் 102 ரன் எடுத்தார். தொடர்ந்து 215 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய ஆஸ்திரேலியா 16.1 ஓவரில் 4 விக்கெட்டை இழந்து 215 எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ஆஸ்திரேலியா தரப்பில் அதிகபட்சமாக டிம் டேவிட் 37 பந்தில் 102 ரன்கள் அடித்தார். இரு அணிகளுக்கும் இடையிலான 4வது டி20 போட்டி இன்று (இந்திய நேரப்படி நாளை) நடக்கிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com