டி20 கிரிக்கெட்; வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய வங்காளதேசம்

வங்காளதேசம் தரப்பில் அதிகபட்சமாக ஷமிம் ஹொசைன் 35 ரன்கள் எடுத்தார்.
Image Courtesy: @BCBtigers / @windiescricket
Image Courtesy: @BCBtigers / @windiescricket
Published on

செயின்ட் வின்சென்ட்,

வங்காளதேச கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடர் 1-1 என சமனில் முடிந்தது. ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸ் கைப்பற்றியது.

இதையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் ஆட்டத்தில் வங்காளதேசம் வெற்றி பெற்றது. இவ்விரு அணிகள் இடையிலான 2வது டி20 போட்டி இன்று நடைபெற்றது. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.

தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த வங்காளதேசம் 20 ஓவர்களில் 7 விக்கெட்டை இழந்து 129 ரன்கள் மட்டுமே எடுத்தது. வங்காளதேசம் தரப்பில் அதிகபட்சமாக ஷமிம் ஹொசைன் 35 ரன்கள் எடுத்தார். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் குடகேஷ் மோடி 2 விக்கெட் வீழ்த்தினார். இதையடுத்து 130 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் களம் புகுந்தது.

வெஸ்ட் இண்டீஸ் அணியினரும் வங்காளதேசத்தின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதில் பிரண்டன் கிங் 8 ரன், ஜான்சன் சார்லஸ் 14 ரன், பூரன் 5 ரன், ரோஸ்டன் சேஸ் 32 ரன், பவல் 6 ரன், அகேல் ஹொசைன் 31 ரன் எடுத்து அடுத்தடுத்து அவுட் ஆகினர்.

இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 18.3 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 102 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 27 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வங்காளதேசம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை கைப்பற்றியது. வங்காளதேசம் தரப்பில் அதிகபட்சமாக தஸ்கின் அகமது 3 விக்கெட் வீழ்த்தினார். இரு அணிகளுக்கும் இடையிலான கடைசி டி20 போட்டி நாளை நடைபெறுகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com