டி20 கிரிக்கெட்: நியூசிலாந்து - தென் ஆப்பிரிக்கா அணிகள் இன்று மோதல்

உலகக் கோப்பை போட்டிக்கான அணியில் அங்கம் வகித்த வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
டி20 கிரிக்கெட்: நியூசிலாந்து - தென் ஆப்பிரிக்கா அணிகள் இன்று மோதல்
Published on

மவுண்ட் மாங்கானு,

20 ஓவர் உலகக் கோப்பை போட்டி முடிந்த ஒரு வாரத்தில் இவ்விரு அணிகளும் மீண்டும் சந்திக்கின்றன. உலகக் கோப்பை போட்டிக்கான அணியில் அங்கம் வகித்த வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இத னால் உலகக் கோப்பையில் ஆடிய ஒரு சில வீரர்கள் மட்டுமே இரு அணிகளிலும் இடம் பெற்றுள்ளனர். இரு அணிகளிலும் புதுமுக வீரர்களுக்கு அதிக இடம் கிடைத்து இருக்கிறது.

தென்ஆப்பிரிக்க அணி பொறுப்பு கேப்டன் கேஷவ் மகராஜ் தலைமை யில் களம் இறங்குகிறது. காயம் காரணமாக உலகக் கோப்பை போட்டி யில் இருந்து ஒதுங்கிய டோனி டி சோர்ஜி உடல் தகுதியை எட்டியதை அடுத்து திரும்பி இருக்கிறார். ஜெரால்டு கோட்ஜீ. ஜார்ஜ் லிண்டே, ஒட் னில் பார்ட்மேன் உள்ளிட்ட சிறந்த வீரர்கள் அந்த அணியில் உள்ளனர்.

மிட்செல் சான்ட்னெர் தலைமையிலான நியூசிலாந்து அணியில் டிவான் கான்வே, டிம் ராபின்சன், கைல் ஜாமிசன், கோல் மெக்கோன்சி, ஜேம்ஸ் நீஷம், சோதி என திறமையான வீரர்களுக்கு குறைவில்லை. தொடரை வெற்றியுடன் தொடங்க இரு அணிகளும் தீவிரம் காட்டும் என்ப தால் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு குறைவு இருக்காது. சம பலம் வாய்ந்த இந்த அணிகளில் யாருடைய கை ஓங்கும் என்று கணிப் பது கடினம். ஆனால் உள்ளூர் சூழல் நியூசிலாந்து அணிக்கு அனுகூல மாக இருக்கும்.

இவ்விரு அணிகளும் 20 ஓவர் போட்டியில் இதுவரை 20 முறை நேருக்கு நேர் சந்தித்து இருக்கின்றன. இதில் 12-ல் தென் ஆப்பிரிக்காவும், 8-ல் நியூசிலாந்தும் வெற்றி பெற்றுள்ளன. இந்த ஆட்டம் இந்திய நேரப்படி பகல் 11.45 மணிக்கு தொடங்குகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com