டி20 கிரிக்கெட்; வங்காளதேசத்தை ஒயிட் வாஷ் செய்த பாகிஸ்தான்

பாகிஸ்தான் தரப்பில் முகமது ஹாரிஸ் சதம் (107 ரன்) அடித்து அசத்தினார்.
Image Courtesy: @ICC
Image Courtesy: @ICC
Published on

லாகூர்,

வங்காளதேச கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடியது. இதில் முதல் இரு ஆட்டங்களில் பாகிஸ்தான் வெற்றி பெற்று தொடரை ஏற்கனவே கைப்பற்றி விட்டது. இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான 3வது மற்றும் கடைசி டி20 போட்டி நேற்று நடைபெற்றது.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்காளதேச அணி 20 ஓவரில் 6 விக்கெட்டை இழந்து 196 ரன்கள் எடுத்தது. வங்காளதேசம் தரப்பில் அதிகபட்சமாக பர்வேஸ் ஹொசைன் எமோன் 66 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து 197 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய பாகிஸ்தான் 17.2 ஓவரில் 3 விக்கெட்டை மட்டும் இழந்து 197 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

பாகிஸ்தான் தரப்பில் முகமது ஹாரிஸ் சதம் (107 ரன்) அடித்து அசத்தினார். இந்த வெற்றியின் மூலம் வங்காளதேசத்தை ஒயிட் வாஷ் செய்த பாகிஸ்தான் டி20 தொடரை 3-0 என முழுமையாக கைப்பற்றியது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com