

டல்லாஸ்
வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் கேப்டனான கீரன் பொல்லார்டு, டி20 கிரிக்கெட்டில் கிறிஸ் கெயிலின் சாதனையை முறியடித்துள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் அணியை சேர்ந்த இடதுகை பேட்ஸ்மேன் கீரன் பொல்லார்டு. முன்னாள் கேப்டனான இவர், டி20 கிரிக்கெட்டில் அதிரடியாக விளையாடி கிறிஸ் கெயிலின் சாதனையை முறியடித்துள்ளார். நடப்பு ஆண்டில் மேஜர் லீக் கிரிக்கெட்டில், எம்.ஐ. நியூயார்க் அணிக்காக விளையாடியபோது, வாஷிங்டன் பிரீடம் அணிக்கு எதிராக நடந்த போட்டியில் இந்த மைல்கல்லை எட்டினார்.
அவர் 736 போட்டிகளில் 14,582 ரன்கள் எடுத்து, கெயிலின் 14,562 ரன்கள் என்ற சாதனையை முறியடித்துள்ளார். இதேபோன்று, 700-க்கும் மேற்பட்ட போட்டிகளில் விளையாடிய ஒரே கிரிக்கெட் வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார்.
இதனால், ஆடவர் டி20 கிரிக்கெட் போட்டிகளில் அதிக ரன்களை குவித்த வீரர் என்ற பெருமையை பொல்லார்டு பெறுகிறார்.