டி20 கிரிக்கெட்: வருண் சக்ரவர்த்தி தேர்வு செய்த கனவு லெவன் அணி.. வெறும் 3 இந்திய வீரர்களுக்கு இடம்


டி20 கிரிக்கெட்: வருண் சக்ரவர்த்தி தேர்வு செய்த கனவு லெவன் அணி.. வெறும் 3 இந்திய வீரர்களுக்கு இடம்
x

image courtesy:ICC

வருண் சக்ரவர்த்தி தேர்வு செய்த அணியில் தோனி, விராட் கோலி மற்றும் ரோகித் சர்மாவுக்கு இடமில்லை.

சென்னை,

இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவரான வருண் சக்ரவர்த்தி டி20 கிரிக்கெட்டில் சிறந்து விளங்கிய வீரர்களை கொண்டு கனவு லெவன் அணியை தேர்வு செய்து அறிவித்துள்ளார். இந்திய முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின் அஸ்வின் உடனான சமீபத்திய உரையாடல் ஒன்றில் வருண் சக்ரவர்த்தி டி20 கிரிக்கெட்டில் ஆல் டைம் லெவன் அணியைத் தேர்வு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டார். அதன்பின் அவர் அணியை தேர்வு செய்துள்ளார்.

வருண் சக்ரவர்த்தி தேர்வு செய்த அணியில் இந்திய டி20 கேப்டனான சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகிய 3 இந்திய வீரர்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளனர். முன்னணி நட்சத்திர வீரர்களான ரோகித் சர்மா, விராட் கோலி, மகேந்திரசிங் தோனி ஆகியோரை தேர்வு செய்யாத அவர் தன்னையும் தேர்ந்தெடுக்கவில்லை.

வருண் சக்ரவர்த்தி தேர்வு செய்த கனவு லெவன் அணி விவரம் பின்வருமாறு:- ஜோஸ் பட்லர், டிராவிஸ் ஹெட், சூர்யகுமார் யாதவ், நிக்கோலஸ் பூரன், ஹென்ரிச் கிளாசென், ஹர்திக் பாண்ட்யா, ஆண்ட்ரே ரசல், சுனில் நரைன், ரஷித் கான், ஜஸ்பிரித் பும்ரா மற்றும் மதீஷா பதிரனா

1 More update

Next Story