டி20 கிரிக்கெட்: டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங் தேர்வு

வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் வங்காளதேசம் கைப்பற்றியது.
Image Courtesy: @BCBtigers
Image Courtesy: @BCBtigers
Published on

டாக்கா,

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் நடந்த ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் வங்காளதேசம் கைப்பற்றியது.

இந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் இன்று தொடங்குகிறது. தொடரின் முதல் போட்டி சட்டோகிராமில் இன்று நடக்கிறது. இந்த போட்டியில் வென்று தொடரை வெற்றியுடன் தொடங்க இரு அணிகளும் முனைப்பு காட்டும். இதனால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

இதையடுத்து இந்த போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளது.  

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com