டி20, ஒருநாள் தொடர்; வங்காளதேசத்திற்கு செல்லும் இந்தியா... எப்போது தெரியுமா..?

Image Courtesy : @BCCI
3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாட இந்திய அணி வங்காளதேசம் செல்கிறது.
புதுடெல்லி,
இந்தியாவில் தற்போது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. 10 அணிகள் கலந்து கொண்டுள்ள இந்த தொடர் அடுத்த மாதம் 25ம் தேதி முடிவடைகிறது. இந்த தொடர் நிறைவடைந்ததும் இந்திய அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது.
இந்த தொடர் ஜூன் 20ம் தேதி முதல் ஆகஸ்டு 04ம் தேதி வரை நடக்கிறது. இந்த தொடரின் ஆட்டங்கள் முறையே லீட்ஸ், பர்மிங்காம், லார்ட்ஸ் லண்டன், மான்செஸ்டர், ஓவல் லண்டன் ஆகிய மைதானங்களில் நடக்கிறது. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் நிறைவடைந்ததும் இந்திய அணி வங்காளதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் ஆட உள்ளது.
3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாட இந்திய அணி வங்காளதேசம் செல்கிறது. இந்த தொடர் ஆகஸ்டு 17ம் தேதி முதல் 31ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தொடரில் முதலில் ஒருநாள் போட்டிகளும் (ஆகஸ்டு 17, 20, 23), இதையடுத்து டி20 போட்டிகளும் (ஆகஸ்டு 26, 29, 31) நடைபெறுகிறது. இது தொடர்பான அறிவிப்பை பி.சி.சி.ஐ இன்று வெளியிட்டுள்ளது.
போட்டி அட்டவணை விவரம்:
ஒருநாள் தொடர்:-
முதல் ஒருநாள் போட்டி: ஆகஸ்டு 17 - மிர்பூர்
2வது ஒருநாள் போட்டி: ஆகஸ்டு 20 - மிர்பூர்
3வது ஒருநாள் போட்டி: ஆகஸ்டு 23 - சட்டோகிராம்
டி20 தொடர்:-
முதல் டி20 போட்டி: ஆகஸ்டு 26 - சட்டோகிராம்
2வது டி20 போட்டி: ஆகஸ்டு 29 - மிர்பூர்
3வது டி20 போட்டி: ஆகஸ்டு 31 - மிர்பூர்






