

டோக்கியோ,
இந்தியா, ஜப்பான் இடையேயான டி20 போட்டி இன்று நடைபெற உள்ளது.
இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணி ஜப்பானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்நாட்டு அணியுடன் ஒரே ஒரு சர்வதேச டி20 போட்டியில் விளையாட உள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி ஜப்பான் அணியுடன் மோதுவது வரலாற்றில் இதுவே முதல் முறை ஆகும். இப்போட்டிக்காக இந்திய அணி ஜப்பான் சென்றுள்ளது. ஜப்பானின் டொஷிகி மாகாணத்தில் உள்ள சானோ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இப்போட்டி இன்று நடைபெற உள்ளது. இந்திய நேரப்படி காலை 9.30 மணிக்கு இப்போட்டி தொடங்குகிறது.
இந்தியா, ஜப்பான் இடையேயான தூதரக உறவு ஏற்பட்டு 75 ஆண்டுகள் ஆகும் நிலையில் அதை கொண்டாடும் வகையில் இருநாடுகளுக்கும் இடையே இந்த டி20 போட்டி நடைபெற உள்ளது. இன்று நடைபெறும் இந்த ஒரே ஒரு டி20 போட்டிக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் விற்று தீர்ந்து விட்டன என்பது குறிப்பிடத்தக்கது.