ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடர்: தீபக் சாஹர் இந்திய அணியில் சேர்ப்பு

ஆஸ்திரேலிய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.
Image : AFP
Image : AFP
Published on

கவுகாத்தி,

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் 2 ஆட்டங்களில் வெற்றி பெற்று தொடரில் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.இந்நிலையில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள பார்சாபாரா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியில் வேகப்பந்து வீச்சாளர் முகேஷ் குமார் இந்திய அணியில் இடம் பெறவில்லை. முகேஷ் குமாருக்கு திருமணம் நடைபெற உள்ளதால் அவர் இந்த தொடரில் இருந்து விலகி உள்ளார். அவருக்கு பதிலாக தீபக் சாஹர் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com