

சென்னை,
ஜிம்பாப்வேவில் நடைபெற உள்ள டி20 தொடரில் காயம் காரணமாக விலகிய வருண் சக்ரவர்த்திக்கு மாற்றாக ரவி பிஷ்னோய் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடி வருகிறது. இந்த தொடரை தொடர்ந்து இந்திய அணி ஜிம்பாப்வேக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்க உள்ளது. இந்த டி20 தொடர் வரும் 23, 25 மற்றும் 26-ம் தேதிகளில் நடைபெற உள்ளது.
இந்நிலையில், அணியில் இடம்பெற்றிருந்த சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தி காயம் காரணமாக தொடரில் இருந்து விலகியுள்ளார். அவருக்கு மாற்றாக ரவி பிஷ்னோய் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஜிம்பாப்வே தொடருக்கான இந்திய அணி:
ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), திலக் வர்மா (துணை கேப்டன்), வைபவ் சூர்யவன்ஷி, அபிஷேக் ஷர்மா, இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), சிவம் துபே, சூர்யான்ஷ் ஷெட்ஜ், ரிங்கு சிங், ஹர்ஷ் துபே, ரவி பிஷ்னோய், பிரின்ஸ் யாதவ், யாஷ் தாக்கூர், அசோக் ஷர்மா, மயங்க் யாதவ், பிரப்சிம்ரன் சிங்.