டி20 தொடர்: இந்திய வீரர் சிராஜ் விடுவிப்பு

இந்திய அணியிலிருந்து முகமது சிராஜ் விலக்கப்பட்டுள்ளார்.
டி20 தொடர்: இந்திய வீரர் சிராஜ் விடுவிப்பு
Published on

மும்பை,

அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்திய கிரிக்கெட் அணி டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இதில், அயர்லாந்துக்கு எதிராக 2 போட்டிகளிலும், இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டிகளிலும் விளையாடுகிறது. இந்த போட்டிக்கான இந்திய அணியில்வேகப்பந்துவீச்சாளர் சிராஜ் இடம் பெற்றிருந்தார்.

இந்த நிலையில், இந்திய அணியிலிருந்து முகமது சிராஜ் விலக்கப்பட்டுள்ளார். அவரது பணிச்சுமை காரணமாக சிராஜுக்கு ஓய்வு அளிக்க பிசிசிஐ மருத்துவக் குழு அறிவுறுத்தியுள்ளது. இதனால் இந்திய அணியிலிருந்து சிராஜ் விலக்கப்பட்டுள்ளார். அவருக்கு மாற்று வீரராக பிரசித் கிருஷ்ணா சேர்க்கப்பட்டுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com