இந்திய அணி குறித்து சோயப் மாலிக் பேச பாகிஸ்தான் அணி நிர்வாகம் தடை..?

பாகிஸ்தான் ஊடக மேலாளர் இந்திய கிரிக்கெட் அணி குறித்து மாலிக்கிடம் எந்த கேள்வியும் கேட்க அனுமதி மறுத்துவிட்டார்.
இந்திய அணி குறித்து சோயப் மாலிக் பேச பாகிஸ்தான் அணி நிர்வாகம் தடை..?
Published on

அபுதாபி

20 ஓவர் உலக கோப்பை போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்திற்கு எதிரான போட்டிகளில் இந்தியா தோல்வியடைந்து உள்ளது. மறுபுறம் பாகிஸ்தான், தொடர்ச்சியாக மூன்று போட்டிகளில் வெற்றி பெற்று, நாளை (நவம்பர் 2) தனது அடுத்த ஆட்டத்தில் நமீபியாவை எதிர்கொள்ளத் தயாராகி அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்துள்ளது.

நியூசிலாந்துடனான இந்தியாவின் தோல்விக்குப் பிறகு, பெரும்பாலான பாகிஸ்தான் ஊடகங்கள், விராட் கோலி குறித்து முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் சோயப் மாலிக்கின் எண்ணங்கள் குறித்து அறிய விரும்பின.

பாகிஸ்தான் ஊடக மேலாளர் இந்திய கிரிக்கெட் அணி குறித்து மாலிக்கிடம் எந்த கேள்வியும் கேட்க அனுமதி மறுத்துவிட்டார். உண்மையில், நிருபர்களின் இரண்டு கேள்விகளையும் அவர் தடுத்து விட்டார். இருப்பினும், இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தைப் போன்ற ஒரு பெரிய ஆட்டத்தை வென்றது அணிக்கு பெரிய நம்பிக்கையை அளித்துள்ளது என்று மாலிக் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com