டி20 உலகக் கோப்பை: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இந்தியா பேட்டிங் தேர்வு

டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத்தி கவுர் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
டி20 உலகக் கோப்பை: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இந்தியா பேட்டிங் தேர்வு
Published on

லண்டன்,

பெண்களுக்கான 10-வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தொடர் இங்கிலாந் தில் நடந்து வருகிறது. பங்கேற்றுள்ள 12 அணி கள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதி வருகின்றன.

லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரி விலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும். இதில் இன்று மான்செஸ்டரில் நடைபெறும் 18-வது லீக் ஆட்டத்தில் இந்தியா- தென் ஆப்பிரிக்கா (குரூப் 1) அணிகள் மோதுகின்றன.

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத்தி கவுர் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com