

டெல்லி,
டி20 உலகக்கோப்பை தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 10-வது லீக் ஆட்டத்தில் நெதர்லாந்து - நமீபியா அணிகள் விளையாடின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி நமீபியா அணி முதலில் பேட்டிங் செய்தது.
அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் எடுத்துள்ளது. அதிகபட்சமாக லாப்டி ஈட்டன் 42 ரன்கள் எடுத்தார். நெதர்லாந்து தரப்பில் வான் பீக், டீ லீட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதையடுத்து 157 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெதர்லாந்து அணி பேட்டிங் செய்தது.
தொடக்கம் முதல் அதிரடியாக விளையாடிய நெதர்லாந்து அணி 18 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்தது. இதனால் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நெதர்லாந்து அணி வெற்றி பெற்றது. அந்த அணியில் சிறப்பாக விளையாடி பாஸ் டி லீட் 72 ரன்கள் , காலின் ஆக்கர்மன் 32 ரன்கள் எடுத்தனர்.