டி20 உலகக் கோப்பை: கனடா அணியை வீழ்த்தி நியூசிலாந்து வெற்றி

நியூசிலாந்து அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


டி20 உலகக் கோப்பை: கனடா அணியை வீழ்த்தி நியூசிலாந்து வெற்றி
Published on

சென்னை,

10வது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா இலங்கையில் நடைபெற்று வருகிறது. இன்று சென்னையில் நடைபெற்ற 31வது ஆட்டத்தில் கனடா- நியூசிலாந்து அணிகள் மோதின. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற கனடா அணியின் கேப்டன் திலபிரீத் பஜ்வா பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி கனடா அணி முதலில் பேட்டிங் செய்தது.

தொடக்கம் முதல் கனடா அணி வீரர்கள் அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தனர். அந்த அணியில் யுவ்ராஜ் சம்ரா சிறப்பாக விளையாடி ரன்கள் குவித்தார். பந்துகளை , பவுண்டரி சிக்சருக்கு பறக்க விட்ட அவர் சதமடித்து அசத்தினார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் கனடா அணி 4 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் எடுத்தது.

தொடர்ந்து 174 ரன்கள் இலக்குடன் நியூசிலாந்து அணி விளையாடியது. தொடக்கத்தில் சீபாராட் 6 ரன்கள் , பின் ஆலன் 21 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். பின்னர் ரச்சின் ரவீந்திரா , கிளென் பிலிப்ஸ் அதிரடியாக விளையாடினர். கனடா அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்தனர். இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர்.

இதனால் நியூசிலாந்து அணி 14 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் எடுத்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.பிலிப்ஸ் 76 ரன்களும் , ரச்சின் ரவீந்திரா 59 ரன்களும் எடுத்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com