

பல்லெகல்லே,
டி20 உலகக் கோப்பையில் கண்டியில் நடைபெற்று வரும் சூப்பர் 8 போட்டியில் பாகிஸ்தான்- இலங்கை அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற இலங்கை பந்து வீச்சை தேர்வு செய்தது.அதன்படி சஹிப்சதா பர்கான், பகர் ஜமான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
பகர் ஜமான் 42 பந்தில் 9 பவுண்டரி, 4 சிக்சருடன் 84 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பர்கான் சிறப்பாக விளையாடி 59 பந்தில் சதம் விளாசினார். அவரது சதத்தில் 9 பவுண்டரிகளும், 5 சிக்சர்களும் அடங்கும். தொடர்ந்து விளையாடிய அவர் 60 பந்தில் 100 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். நடப்பு டி20 தொடரில் அவருக்கு இது 2-வது சதமாகும்.
இதற்கு முன்னதாக நமீபியாவுக்கு எதிராக சதம் அடித்திருந்தார். இதன்மூலம் ஒரு டி20 உலகக் கோப்பையில் 2 சதம் விளாசிய முதல் வீரர் சாதனையை ஃபர்கான் படைத்துள்ளார்.