டி20 உலகக் கோப்பை: நெதர்லாந்து அணியை வீழ்த்தி பாகிஸ்தான் திரில் வெற்றி

7 விக்கெட் இழப்பிற்கு பாகிஸ்தான் அணி 148 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

டி20 உலகக் கோப்பை: நெதர்லாந்து அணியை வீழ்த்தி பாகிஸ்தான் திரில் வெற்றி
Published on

கொழும்பு,

டி20 உலகக்கோப்பை தொடர் கொழும்புவில் தொடங்கியுள்ளது. இதன் முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் -நெதர்லாந்து அணிகள் விளையாடின. இந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி, டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வுசெய்துள்ளது.

அதன்படி, நெதர்லாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. பாகிஸ்தான் அணியின் அபார பந்துவீச்சில் நெதர்லாந்து அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தது. கேப்டன் ஸ்காட் எட்வர்ஸ், அதிகபட்சமாக 37 ரன்கள் எடுத்தார். இறுதியில் நெதர்லாந்து அணி 19.5 ஓவர்களில் 148 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

தொடர்ந்து விளையாடிய பாகிஸ்தான் அணியும் நெதர்லாந்து அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.

இருப்பினும் பாகிஸ்தான் அணியில் சாஹிப்சதா பர்ஹான் நிலைத்து ஆடி 47 ரன்கள் எடுத்தார். சைம் ஆயுப் 24 ரன்கள் எடுத்தார். கடைசியில் பஹீம் அஷரீப் பந்துகளை சிக்சருக்கு பறக்க விட்டார். ஒரே ஓவரில் 3 சிக்ஸர்கள் பறக்க விட்டார்.இதனால் 19.3 ஓவர்கள் முடிவில் 7விக்கெட் இழப்பிற்கு பாகிஸ்தான் அணி 148 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com