டி20 உலகக் கோப்பை: பார்வையாளர்களின் எண்ணிக்கையில் சாதனை

முன்பு நடந்த உலகக் கோப்பை போட்டிகளை பார்த்தவர்களை விட அதிகபட்சம் என குறிப்பிட்டார்.

டி20 உலகக் கோப்பை: பார்வையாளர்களின் எண்ணிக்கையில் சாதனை
Published on

மும்பை,

10-வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இறுதிகட்ட ஆட்டங்கள் இந்தியாவில் நடந்து வருகிறது. இதில் கொல்கத்தாவில்நடைபெற்ற அரையிறுதியில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி நியூசிலாந்து அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது . மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இன்று (வியாழக்கிழமை) அரங் கேறும் 2-வது அரையிறுதியில் நடப்பு சாம்பிய னான இந்திய அணி, முன்னாள் சாம்பியன் இங்கிலாந்தை எதிர்கொள்கிறது.

இந்த நிலையில் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை இந்தியாவில் டி.வி. சேனல் மற்றும் செயலியின் மூலம் பார்த்தவர்களின் எண்ணிக்கை 50 கோடியை தாண்டி விட்டதாக (நாக்-அவுட் சுற்றுக்கு முன்பாக) சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) தலைவர் ஜெய் ஷா கூறியுள்ளார். இது இதற்கு முன்பு நடந்த உலகக் கோப்பை போட்டிகளை பார்த்தவர்களை விட அதிகபட்சம் என பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com