

துபாய்,
7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. இதில் முதல் சுற்று நிறைவடைந்த நிலையில் சூப்பர்-12 சுற்று இன்று தொடங்கியுள்ளது. சூப்பர்-12 சுற்றில் குரூப்-1-ல் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், இலங்கை, வங்காளதேசம் ஆகிய அணிகளும், குரூப்-2-ல் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், ஸ்காட்லாந்து, நமிபியா ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன. இதில் ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்குள் நுழையும்.
சூப்பர்-12 சுற்றின் முதல் நாளான இன்று அபுதாபியில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. இதில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து 2-வது சூப்பர் 12 ஆட்டம் துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடக்கிறது. இந்த ஆட்டத்தில் இங்கிலாந்து-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதுகின்றன.
இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் இயன் மார்கன் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணி தற்போது முதலாவதாக பேட்டிங் செய்து வருகிறது. இன்றைய ஆட்டத்தில் இரு அணிகளிலும் இடம்பெற்றுள்ள வீரர்கள் பட்டியல் வருமாறு;-
இங்கிலாந்து அணி: ஜாசன் ராய், ஜோஸ் பட்லர், டேவிட் மலான், இயன் மார்கன்(கேப்டன்), பேர்ஸ்டோ, லியாம் லிவிங்ஸ்டன், மொயீன் அலி, கிறிஸ் வோக்ஸ், கிறிஸ் ஜோர்டான், அடில் ரஷித், டைமல் மில்ஸ்.
வெஸ்ட் இண்டீஸ்: இவின் லீவிஸ், லென்டில் சிமோன்ஸ், கெய்ல், நிகோலஸ் பூரன், ஹெட்மயர், பொல்லார்ட் (கேப்டன்), ஆந்த்ரே ரஸ்செல், வெய்ன் பிராவோ, அகேல் ஹூசைன், ஒபேட் மெக்காய், ரவி ராம்பால்.