

கொல்கத்தா,
10வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா, இலங்கையில் நடைபெற்று வருகிறது. கொல்கத்தாவில் இன்று நடைபெற்ற 37வது லீக் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் -இத்தாலி அணிகள் மோதின. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற இத்தாலி அணியின் கேப்டன் ஹாரி மனேன்டி பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது.
வெஸ்ட் இண்டீஸ் அணியில் ஷாய் ஹோப் ஹாப் நிலைத்து விளையாடி ரன்கள் குவித்தார். அதிரடியாகி விளையாடிய அவர் அரைசதமடித்தார். ஷாய் ஹோப் 75 ரன்கள் எடுத்தார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து 166 ரன்கள் இலக்குடன் இத்தாலி விளையாடியது.
வெஸ்ட் இண்டீஸ் அணியின் அபார பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இத்தாலி அணி, சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. இறுதியில் அந்த அணி 18 ஓவர்களில் 123 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பென் மெனந்தி அதிகபட்சமாக 26 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் இத்தாலியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. வெஸ்ட் இஸ்டீஸ் தரப்பில் சமர் ஜோசப் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.