டி20 உலகக் கோப்பை:  இத்தாலிக்கு 166 ரன்கள் இலக்கு நிர்ணயித்த வெஸ்ட் இண்டீஸ்

டி20 உலகக் கோப்பை: இத்தாலிக்கு 166 ரன்கள் இலக்கு நிர்ணயித்த வெஸ்ட் இண்டீஸ்

ஷாய் ஹோப் ஹாப் நிலைத்து விளையாடி ரன்கள் குவித்தார்.
Published on

கொல்கத்தா,

10வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா, இலங்கையில் நடைபெற்று வருகிறது. கொல்கத்தாவில் இன்று நடைபெறும் 37வது லீக் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் - இத்தாலி அணிகள் மோதுகின்றன.

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற இத்தாலி அணியின் கேப்டன் ஹாரி மனேன்டி பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது .

வெஸ்ட் இண்டீஸ் அணியில் ஷாய் ஹோப் ஹாப் நிலைத்து விளையாடி ரன்கள் குவித்தார். அதிரடியாகி விளையாடிய அவர் அரைசதமடித்தார். ஷாய் ஹோப் 75 ரன்கள் எடுத்தார்.

இதனால் 20 ஓவர்கள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து 166 ரன்கள் இலக்குடன் இத்தாலி விளையாடுகிறது. .

X

Daily Thanthi
www.dailythanthi.com