வெஸ்ட் இண்டீஸ்-க்கு எதிரான டி20 போட்டி: ஆஸ்திரேலிய பிளேயிங் லெவன் அறிவிப்பு

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

கிங்ஸ்டன்,

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதலில் நடந்த 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் வெஸ்ட் இண்டீசை எளிதில் வீழ்த்திய ஆஸ்திரேலியா தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது. இதைத்தொடர்ந்து இவ்விரு அணிகள் இடையே 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெறுகிறது.

இதில் ஆஸ்திரேலியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான முதலாவது டி20 போட்டி கிங்ஸ்டனில் உள்ள சபீனா பார்க் மைதானத்தில் இந்திய நேரப்படி நாளை (திங்கட்கிழமை) அதிகாலை நடக்கிறது. கடந்த ஆண்டு நவம்பர் மாதத்திற்கு பிறகு ஆஸ்திரேலிய அணி ஆடும் முதல் டி20 போட்டி இதுவாகும்.

இந்நிலையில் இந்த போட்டிக்கான பிளேயிங் லெவனை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இந்த அணியில் ஜேக் பிரேசர் மெக்கர், மிட்செல் ஓவன், கூப்பர் கன்னோலி போன்ற இளம் வீரர்கள் இடம் பிடித்துள்ளனர்.

ஆஸ்திரேலிய பிளேயிங் லெவன் விவரம்: மிட்செல் மார்ஷ் (கேப்டன்), ஜேக் பிரேசர் மெக்கர், ஜோஷ் இங்கிலிஸ் (விக்கெட் கீப்பர்), கேமரூன் க்ரீன், கிளென் மேக்ஸ்வெல், மிட்செல் ஓவன், கூப்பர் கன்னோலி, பென் துவார்ஷியஸ், சீன் அப்போட், நாதன் எல்லிஸ், ஆடம் ஜாம்பா.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com