டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வா..? விளக்கம் கொடுத்த டேவிட் மில்லர்

சர்வதேச டி20 கிரிக்கெட்டிலிருந்து தான் ஓய்வு பெற்றுவிட்டதாக தகவல் வெளியான நிலையில் இது குறித்து தற்போது மில்லர் விளக்கம் அளித்துள்ளார்.
image courtesy: AFP
image courtesy: AFP
Published on

கேப்டவுன்,

அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்ற 9-வது டி20 உலகக்கோப்பை தொடரில் தென் ஆப்பிரிக்க அணி இறுதிப்போட்டியில் வெற்றியை நெருங்கி வந்து கோப்பையை தவறவிட்டது.

குறிப்பாக கடைசி ஓவரில் வெற்றிக்கு 16 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் முதல் பந்தில் சிக்சர் அடிக்க முயற்சித்து ஆட்டமிழந்த டேவிட் மில்லர் கண்ணீர் விட்டார். இதனையடுத்து டேவிட் மில்லர் சர்வதேச டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக வதந்திகள் பரவின.

இந்நிலையில் டேவிட் மில்லர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இது குறித்து விளக்கம் கொடுத்துள்ளார். அதில், "டி20 கிரிக்கெட்டிலிருந்து நான் ஓய்வு அறிவிக்கவில்லை. தென் ஆப்பிரிக்கா அணிக்காகவே தொடர்ந்து விளையாட தயாராக இருக்கிறேன்"என்று பதிவிட்டுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com