சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் திருவள்ளூர் வீரன்ஸ் 126 ரன்களில் சுருண்டது

டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு எதிரான போட்டியில் திருவள்ளூர் வீரன்ஸ் அணி 126 ரன்களில் சுருண்டது.
சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் திருவள்ளூர் வீரன்ஸ் 126 ரன்களில் சுருண்டது
Published on

நெல்லை,

2வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னை, நெல்லை, நத்தம் ஆகிய 3 இடங்களில் நடந்து வருகிறது. நடப்பு சாம்பியன் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ், சேப்பாக் சூப்பர் கில்லீஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், திருவள்ளூர் வீரன்ஸ், திருச்சி வாரியர்ஸ், காரைக்குடி காளை, மதுரை சூப்பர் ஜெயன்ட், கோவை கிங்ஸ் ஆகிய 8 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய பிளேஆப் சுற்றுக்கு முன்னேறும்.

இந்த நிலையில் தொடரின் 3வது லீக் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் திருவள்ளூர் வீரன்ஸ் அணிகள் நெல்லையில் இன்று(திங்கட்கிழமை) பலப்பரீட்சையில் இறங்கி உள்ளது.

போட்டியில் டாஸ் வென்ற திருவள்ளூர் வீரன்ஸ் அணி பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. முதலாவது ஓவரிலே திருவள்ளூர் வீரன்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஹரி நிஷாந்த் ரன் எதுவும் எடுக்காமல் அவுட் ஆனார். சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி பந்துவீச்சில் அபாரம் காட்டியது. திருவள்ளூர் வீரன்ஸ் அணி தொடர்ச்சியாக விக்கெட்களை இழந்தது. திருவள்ளூர் வீரன்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 126 ரன்களில் சுருண்டது. அபிஷேக் தன்வார் (25 ரன்கள்), ராஹில் ஷா (5 ரன்கள்) ஆட்டமிழக்காமல் இறுதியில் களத்தில் நின்றனர்.

திருவள்ளூர் வீரன்ஸ் அணியில் அதிகப்பட்சமாக சதுர்வேத் 35 ரன்களையும், மலோலன் ரங்கராஜன் 27 ரன்களையும், அபிஷேக் தன்வார் 25 ரன்களையும் எடுத்தனர். சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு 127 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியில் அதிகப்பட்சமாக ராஜகோபால் சதிஷ் 3 விக்கெட்களை கைப்பற்றினார். சாய் கிஷோர் 2 விக்கெட்களையும், மகேஷ் ஒரு விக்கெட்டையும் எடுத்தனர்.

விக்கெட் விபரம்:-

1-1 (ஹரி நிஷாந்த், 0.2), 41-2 (பாபா அபராஜித், 4.5), 50-3 (சதுர்வேத், 6.4), 50-4 (சித்தார்த், 7.1), 55-5 (சஞ்சய் யாதவ், 8.6), 91-6 (ராஜன், 14.4), 96-7 ( மலோலன் ரங்கராஜன், 16.3)

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com