வங்கதேச கிரிக்கெட் வீரர் தமிம் இக்பாலுக்கு மைதானத்திலேயே நெஞ்சுவலி

வங்கதேச கிரிக்கெட் வீரர் தமிம் இக்பால் விளையாடிக் கொண்டிருந்தபோது,மைதானத்திலேயே அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது.
தமிம் இக்பால் (image courtesy: ICC via ANI)
தமிம் இக்பால் (image courtesy: ICC via ANI)
Published on

டாக்கா,

டாக்கா பிரீமியர் லீக் போட்டியில் விளையாடிக் கொண்டிருந்த வங்கதேச கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தமிம் இக்பாலுக்கு மைதானத்திலேயே திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வங்காளதேசத்தில் தற்போது டாக்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் முகமதின் ஸ்போர்ட்டிங் கிளப் - ஷைன்புகூர் கிரிக்கெட் கிளப் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் ஷைன்புகூர் அணி முதலில் பேட்டிங் செய்தது. முகமதின் அணி பீல்டிங் செய்தது. அந்த அணியின் கேப்டன் தமிம் இக்பாலுக்கு விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது.

இதையடுத்து மைதானத்துக்கு விரைந்து வந்த மருத்துவக் குழு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். விமானம் மூலம் அவரை டாக்காவில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டது. ஆனால் அவரது உடல்நிலை மிகவும் மோசமாக இருந்ததால் அந்த முடிவு கைவிடப்பட்டது. இதையடுத்து அவர் பாசிலதுன்னேசா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கிரிக்கெட் விளையாடும் போதே மாரடைப்பை எதிர்கொண்ட வீரர்கள்

வங்கதேச கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தமீம் இக்பாலுக்கு கிரிக்கெட் விளையாடும் போதே மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் தற்போது சிகிச்சையில் உள்ளார். இதேபோல பாகிஸ்தான் வீரர் பவத் அலம் கடந்த 2022-ல் நெஞ்சு வலியால் அவதிப்பட்டார்.

இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் டெயிலர் இதய நோய் பாதிப்பால் கடந்த 2016ல் ஓய்வு பெற்றார். ஆஸ்திரேலிய வீரர் மைக்கேல் கிளார்குக்கு கடந்த 2014-ல் விளையாடும் போது மாரடைப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com