தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடர் - இந்திய அணி அறிவிப்பு... 2 புதுமுகங்களுக்கு இடம்

5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் ஏப்ரல் 17 முதல் தொடங்குகிறது.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடர் - இந்திய அணி அறிவிப்பு... 2 புதுமுகங்களுக்கு இடம்
Published on

புதுடெல்லி,

ஐபிஎல் 2026 சீசன் துவங்க உள்ளநிலையில், இந்திய பெண்கள் அணி தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணத்துக்கு தயாராகிறது. ஏப்ரலில் நடைபெற உள்ள 5 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்காக 15 பேர் கொண்ட வலுவான அணியை தற்போது பிசிசிஐ அறிவித்துள்ளது.

5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் ஏப்ரல் 17 முதல் தொடங்குகிறது. இந்த அணிக்கு வழக்கம்போல் ஹர்மன்ப்ரீத் கவுர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இளம் வீராங்கனைகள் காஷ்வி கவுதம் மற்றும் அனுஷ்கா சர்மா முதல் முறையாக இந்திய டி20 அணியில் இடம் பெற்றுள்ளனர். உள்நாட்டு போட்டிகளில் சிறப்பாக விளையாடியதன் பலனாக இவர்களுக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.

Also Read
ராஜஸ்தானை முந்திய பெங்களூரு… ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகைக்கு விற்பனையாகி சாதனை
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடர் - இந்திய அணி அறிவிப்பு... 2 புதுமுகங்களுக்கு இடம்

மேலும், அனுபவம் வாய்ந்த ஸ்மிருதி மந்தனா, ஷெபாலி வர்மா, ஜெமிமா ரொட்ரிக்ஸ், தீப்தி சர்மா போன்றோர் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

அணி விவரம்:

ஹர்மன்ப்ரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா, ஷெபாலி வர்மா, ஜெமிமா ரொட்ரிக்ஸ், தீப்தி சர்மா, ரிச்சா கோஷ், அருந்ததி ரெட்டி, ரேணுகா தாக்கூர், கிராந்தி கவுட், ஸ்ரீ சரணி, ஸ்ரேயங்கா பட்டீல், காஷ்வி கவுதம், பாரதி புல்மாலி, உமா சேத்ரி, அனுஷ்கா சர்மா.

போட்டி அட்டவணை:

ஏப்ரல் 17 - 1வது டி20, டர்பன்

ஏப்ரல் 19 - 2வது டி20, டர்பன்

ஏப்ரல் 22 - 3வது டி20, ஜொஹன்னஸ்பர்க்

ஏப்ரல் 25 - 4வது டி20, ஜொஹன்னஸ்பர்க்

ஏப்ரல் 27 - 5வது டி20, பெனோனி

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com