இந்தியாவுக்கு அடுத்த சிக்கல்... அணியிலிருந்து வெளியேறிய அதிரடி வீரர் - என்ன காரணம்?

இந்திய அணி சென்னையில் நாளை ஜிம்பாப்வே அணியை எதிர்கொள்ள உள்ளது.
இந்தியாவுக்கு அடுத்த சிக்கல்... அணியிலிருந்து வெளியேறிய அதிரடி வீரர் - என்ன காரணம்?
Published on

சென்னை,

உலகக் கோப்பை தொடரில் விளையாடி வரும் இந்திய அணிக்கு திடீர் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அணியின் அதிரடி ஆட்டக்காரர் ரிங்கு சிங் குடும்ப அவசர நிலை காரணமாக வீடு திரும்பியுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

ரிங்குவின் தந்தை ஸ்டேஜ்-4 கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். உடல்நிலை மோசமடைந்ததால், அவருடன் இருக்க ரிங்கு தற்காலிகமாக அணியை விட்டு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

சூப்பர்-8 சுற்றின் முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணியிடம் தோல்வியடைந்த இந்திய அணி தற்போது ‘டூ ஆர் டை’ நிலையில் உள்ளது. அடுத்ததாக ஜிம்பாப்வே அணியை சென்னையில் நாளை எதிர்கொள்ள உள்ளது.

Also Read
டி20 உலகக்கோப்பையில் சதம் அடித்த முதல் கேப்டன்... ஹாரி புரூக் சாதனை
இந்தியாவுக்கு அடுத்த சிக்கல்... அணியிலிருந்து வெளியேறிய அதிரடி வீரர் - என்ன காரணம்?

ரிங்கு சிங் விலகலால், அந்த போட்டியில் வாஷிங்டன் சுந்தர் அல்லது அக்சர் படேல் அணியில் சேர்க்கப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தொடரில் ரிங்கு சிங் இதுவரை 5 இன்னிங்ஸ்களில் 24 ரன்கள் மட்டுமே எடுத்து பார்ம்-ல் தடுமாறி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com