ஷமார் ஜோசப்பின் வாழ்க்கை பயணத்தை பற்றி படிக்கும்போது கண்களில் கண்ணீர் வந்தது - டி வில்லியர்ஸ்

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.
Image Courtesy: AFP
Image Courtesy: AFP
Published on

கேப்டவுன்,

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 1-1 என சமனில் முடிந்தது. முதல் டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றது.

இரு அணிகளுக்கும் இடையிலான 2வது டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. அந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஷமார் ஜோசப் மொத்தம் 8 விக்கெட்டுகள் வீழ்த்தி ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதை தட்டிச் சென்றார்.

இதன்மூலம், வெஸ்ட் இண்டீஸ் அணி, ஆஸ்திரேலிய மண்ணில் 27 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றுள்ளது.

இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய ஷமார் ஜோசப்பின் வாழ்க்கையை விக்கிபீடியாவில் படித்து கண் கலங்கியதாக தென் ஆப்பிரிக்கா அணியின் முன்னாள் வீரர் டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது, நீங்கள் ஒரு உதவி செய்யுங்கள். அவருடைய வாழ்க்கையை பற்றி விக்கிபீடியாவில் படியுங்கள். அவரது பயணத்தை பற்றி படிக்கும்போது எனது கண்களில் கண்ணீர் வந்தது. எளிமையாக சொன்னால் உங்களுக்கு ஊக்கமளிக்கும். இவ்வாறு டி வில்லியர்ஸ் கூறினார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com