திரும்ப வந்துட்டேன்னு சொல்லு... டி20 தரவரிசையில் மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறிய இந்தியா

இந்திய அணி டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றி ஜிம்பாப்வே அணியை ஒயிட்வாஷ் செய்தது.
இந்தியா
Published on

ஹராரே,

டி20 தரவரிசையில் இந்திய அணி மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறி உள்ளது.

கடைசி டி20

இந்தியா - ஜிம்பாப்வே அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று ஹராரேயில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து, 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 192 ரன்கள் குவித்தது.

ஒயிட்வாஷ்

இதையடுத்து 193 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய ஜிம்பாப்வே அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் இந்திய அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றி ஜிம்பாப்வே அணியை ஒயிட்வாஷ் செய்தது.

மீண்டும் நம்பர் 1

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான தொடரை கைப்பற்றியததன் பலனாக, இந்திய அணி ஐசிசி சர்வதேச டி20 அணிகள் தரவரிசையில் மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. இதன் மூலம் இங்கிலாந்தை பின்னுக்கு தள்ளி உலகின் நம்பர் 1 டி20 அணியாக மீண்டும் தனது இடத்தை உறுதிப்படுத்தியுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com