ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட்; முதல் நாள் முடிவில் ஜிம்பாப்வே 363/4

ஜிம்பாப்வே தரப்பில் அதிகபட்சமாக சீன் வில்லியம்ஸ் 145 ரன்களுடன் களத்தில் உள்ளார்.
Image Courtesy: @ZimCricketv
Image Courtesy: @ZimCricketv
Published on

புலவாயோ,

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை 2-1 என்ற கணக்கிலும், அடுத்து நடைபெற்ற ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கிலும் ஆப்கானிஸ்தான் அணி கைப்பற்றியது.

இந்நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையிலான பாக்சிங் டே டெஸ்ட் புலவாயோவில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய ஜிம்பாப்வே தொடக்கம் முதலே அதிரடியாக ஆடியது. தொடக்க ஆட்டக்காரர் ஜாய்லார்டு கம்பே 9 ரன்னில் அவுட்டானார்.

மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் பென் கர்ரன் பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்து 68 ரன்னில் வெளியேறினார். அடுத்து இறங்கிய கைடனோ 46 ரன்னில் அவுட்டானார். டயான் மையர்ஸ் 27 ரன்னில் ஆட்டமிழந்தார். ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் சீன் வில்லியம்ஸ் சிறப்பாக ஆடி சதமடித்தார்.

கேப்டன் கிரெய்க் எர்வின் அரை சதம் கடந்தார். இறுதியில், முதல் நாள் முடிவில் ஜிம்பாப்வே அணி முதல் இன்னிங்சில் 4 விக்கெட் இழப்புக்கு 363 ரன்கள் எடுத்தது. சீன் வில்லியம்ஸ் 145 ரன்னும், எர்வின் 56 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். இன்று 2ம் நாள் ஆட்டம் நடைபெறுகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com