வங்காளதேசத்துக்கு எதிரான டெஸ்ட்: பாகிஸ்தான் 232 ரன்னுக்கு ஆல் அவுட்

பாகிஸ்தான் அணி, 57.4 ஓவர்கள் விளையாடி 232 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
வங்காளதேசத்துக்கு எதிரான டெஸ்ட்: பாகிஸ்தான் 232 ரன்னுக்கு ஆல் அவுட்
Published on

சைல்ஹெட்,

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து அந்த நாட்டு அணிக்கு எதிராக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. உல டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்ட இந்த போட்டி தொடரில் மிர்புரில் நடந்த முதலாவ ஆட்டத்தில் நஜ்முல் ஹூசைன் ஷன்டோ தலைமையிலான வங்காளதேச அணி 104 ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் பாகிஸ்தான்-வங்காளதேசம் அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சைல்ஹெட்டில் நேற்று தொடங்கியது. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் ஷான் மஸத் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த வங்காளதேச அணி முதல் இன்னிங்சில் 77 ஓவர்கள் விளையாடி 278 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

வங்காளதேச அணியில் லிட்டன் தாஸ் சதமடித்து அசத்தினார். அவர் 128 ரன்களில் ஆட்டமிழந்தார். மற்ற பேட்ஸ்மேன்களுக்கு சிறந்த தொடக்கம் கிடைத்தாலும், அதனை பெரிய ஸ்கோராக மாற்ற தவறினர். பாகிஸ்தான் அணியில் குர்ரம் ஷசாத் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதனை தொடர்ந்து பாகிஸ்தான் அணி விளையாடியது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் பாகிஸ்தான் அணி 6 ஓவர்கள் விளையாடி, விக்கெட் இழப்பின்றி 21 ரன்களை எடுத்திருந்த நிலையில், இன்று 2ம் நாள் ஆட்டம் நடைபெற்றது. தொடர்ந்து விளையாடிய பாகிஸ்தான் அணி, 57.4 ஓவர்கள் விளையாடி 232 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக அனுபவ வீரர் பாபர் அசாம் 68 ரன்கள் எடுத்தார். இதனை தொடர்ந்து வங்காளதேச அணி தனது 2-வது இன்னிங்சில் விளையாடி வருகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com