வங்காளதேசத்துக்கு எதிரான டெஸ்ட்: தென்ஆப்பிரிக்கா 287 ரன் சேர்ப்பு

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வங்காளதேச அணி முதல் இன்னிங்ஸில் 400 ரன்கள் குவித்துள்ளது.
வங்காளதேசத்துக்கு எதிரான டெஸ்ட்: தென்ஆப்பிரிக்கா 287 ரன் சேர்ப்பு
Published on: 

வங்காளதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தென்ஆப்பிரிக்கா 287 ரன் சேர்த்துள்ளது.

ஜோகன்னஸ்பர்க்,

தென்ஆப்பிரிக்கா, வங்காளதேசம் கிரிக்கெட் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் நேற்று முன்தினம் தொடங்கியது. முதலில் பேட் செய்த வங்காளதேசம் தொடக்க நாளில் 6 விக்கெட்டுக்கு 327 ரன்கள் எடுத்திருந்தது. தவ்ஹித் ஹிரிடாய் சதம் (137 ரன்) அடித்தார். விக்கெட் கீப்பர் லிட்டான் தாஸ் 92 ரன்களுடன் களத்தில் இருந்தார்.

இந்த நிலையில் 2-வது நாளான நேற்று தொடர்ந்து பேட் செய்து தனது 8-வது சதத்தை பூர்த்தி செய்த லிட்டான் தாஸ் 120 ரன்களில் கேட்ச் ஆனார். முடிவில் வங்காளதேசம் 101.2 ஓவர்களில் 400 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக வங்காளதேசத்தின் அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும்.

பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய தென்ஆப்பிரிக்கா எய்டன் மார்க்ரமின் (4 ரன்) விக்கெட்டை சீக்கிரம் இழந்தாலும் ஜூபைர் ஹம்சா (83 ரன்), மார்கியூஸ் அக்கர்மேன் ஆகியோரின் சிறப் பான பேட்டிங்கால் மீண்டது. சர்வதேச கிரிக்கெட்டில் தனது 'கன்னி' சதத்தை எட்டிய அக்கர் மேன் 157 ரன்களில் (164 பந்து, 21 பவுண்டரி, ஒரு சிக்சர்) ஆட்டமிழந்தார்.

ஆட்ட நேர முடிவில் தென்ஆப்பிரிக்கா 62 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 287 ரன்கள் சேர்த்துள்ளது. கேப்டன் பவுமா (19 ரன்), ரையான் ரிக்கெல்டன் (7 ரன்) களத்தில் உள்ளனர். இன்னும் 113 ரன் பின்தங்கியுள்ள தென்ஆப்பிரிக்கா இன்று 3-வது நாளில் தொடர்ந்து விளையாடும்.

X