வங்காளதேசத்திற்கு எதிரான டெஸ்ட்; முதல் இன்னிங்சில் தென் ஆப்பிரிக்கா 308 ரன்கள் குவிப்பு

தென் ஆப்பிரிக்கா தரப்பில் அதிகபட்சமாக கைல் வெர்ரியன்னே சதம் அடித்து (114 ரன்) அவுட் ஆனார்.
Image Courtesy: @ProteasMenCSA
Image Courtesy: @ProteasMenCSA
Published on

டாக்கா,

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி வங்காளதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி டாக்காவில் நேற்று தொடங்கியது. இந்த ஆட்டத்திற்கான டாஸ் வென்ற வங்காளதேச அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

அதன்படி முதல் இன்னிங்சை தொடங்கிய வங்காளதேச அணி தனது முதல் இன்னிங்சில், தென் ஆப்பிரிக்காவின் அபார பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 40.1 ஓவர்களில் 106 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் ககிசோ ரபாடா, வியான் முல்டர், கேசவ் மகராஜ் ஆகியோர் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

இதையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்பிரிக்கா நேற்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 140 ரன்கள் எடுத்திருந்தது. கைல் வெர்ரியன்னே 18 ரன்களுடனும், வியான் முல்டர் 17 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். வங்காளதேசம் தரப்பில் அதிகபட்சமாக தைஜூல் இஸ்லாம் 5 விக்கெட்டுகள் வீழ்த்தி இருந்தார்.

இந்நிலையில், இன்று 2ம் நாள் ஆட்டம் நடைபெற்று வருகிறது. இதில் தொடர்ந்து பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா தனது முதல் இன்னிங்சில் 308 ரன்களை குவித்துள்ளது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் அதிகபட்சமாக கைல் வெர்ரியன்னே சதம் அடித்து (114 ரன்) அவுட் ஆனார். இதையடுத்து 202 ரன்கள் பின்னிலையுடன் வங்காளதேசம் தனது 2வது இன்னிங்சை ஆடி வருகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com