இந்திய ஏ அணிக்கு எதிரான டெஸ்ட்: இங்கிலாந்து லயன்ஸ் பந்துவீச்சு தேர்வு

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது.
image courtesy:twitter/@BCCI
image courtesy:twitter/@BCCI
Published on

நார்த்தம்டான்,

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. அதன்படி இவ்விரு அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வருகிற 20-ம் தேதி தொடங்க உள்ளது. 2025-2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் அங்கமாக நடைபெறும் இந்த தொடரில் வெற்றி பெற இரு அணிகளும் கடுமையாக போராடும் என்பதால் இந்த தொடர் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இந்த தொடருக்கு முன்னதாக இந்திய 'ஏ' அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இங்கிலாந்து லயன்சுக்கு எதிராக 2 டெஸ்ட் (4 நாட்கள்) போட்டிகளில் விளையாடி வருகிறது. இந்த தொடர் கடந்த 30-ம் தேதி தொடங்கியது. அதன்படி நடைபெற்ற இந்த தொடரின் முதல் போட்டி சமனில் முடிந்தது.

இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நார்த்தம்டானில் இன்று நடைபெறுகிறது. இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றப்போவது யார்? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்நிலையில், இந்த போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாசில் வென்ற இங்கிலாந்து லயன்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com