நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: இங்கிலாந்து அணி 354 ரன்னுக்கு ஆல் அவுட்

இங்கிலாந்து அணி, 88.2 ஓவர்களில் 354 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: இங்கிலாந்து அணி 354 ரன்னுக்கு ஆல் அவுட்
Published on

நாட்டிங்கம்,

இங்கிலாந்து - நியூசிலாந்து இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி நேற்று முன்தினம் தொடங்கியது.

இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஏற்கனவே 2 ஆட்டங்களில் நிறைவடைந்த நிலையில் 1-1 என்ற புள்ளி கணக்கில் இரு அணிகளும் சமநிலையில் உள்ளன.

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி நேற்று முன்தினம் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. இதையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து 438 ரன்கள் குவித்தது.

இங்கிலாந்து நிதான ஆட்டம்

இதனை தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 223 ரன்கள் எடுத்திருந்த நிலையில், இன்று 3-ம் நாள் ஆட்டம் நடைபெற்று வருகிறது. இங்கிலாந்தின் பென் டக்கெட் சதம் விளாசினார். அவர் 113 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். ஜக்கப் பெத்தல் 74 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ரூட் 21 ரன்களும், புரூம் 58 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். தொடர்ந்து பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி, 88.2 ஓவர்களில் 354 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

ஆரம்பமே அதிர்ச்சி..

இதனை தொடர்ந்து நியூசிலாந்து அணி தனது இரண்டாவது இன்னிங்சில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. முதல் இன்னிங்சில் சதமடித்து இருந்த லாதம் மற்றும் கான்வே இரண்டாவது இன்னிங்சில் ஏமாற்றமளித்தனர். இருவரும் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறிய நிலையில், நியூசிலாந்து அணி தற்போது வரை 16 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 64 ரன்களை எடுத்து விளையாடி வருகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com