வெஸ்ட் இண்டீஸ்-க்கு எதிரான டெஸ்ட்; விராட் கோலியின் நடனம் - வைரலாகும் வீடியோ...!

வெஸ்ட் இண்டீஸ்-க்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
Screen Grab From The Video Tweeted By @FanCode
Screen Grab From The Video Tweeted By @FanCode
Published on

டொமினிகா,

வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 2 டெஸ்ட், 3 ஒருநாள், 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று ஆடி வருகிறது. இதில் முதலாவதாக டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது.

இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் ஜெய்ஸ்வால் மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் அறிமுக வீரர்களாக களம் இறங்கினர்.

இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 150 ரன்னுக்கு சுருண்டது. அடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 421 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. 2 அடுத்து தனது 2வது இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 130 ரன்னில் சுருண்டது. அஷ்வின் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி அமர்களப்படுத்தினார்.

இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜெய்ஸ்வால் 171 ரன் குவித்து மேன் ஆப் த மேட்ச் விருதை பெற்றார். இந்த ஆட்டத்தில் இந்திய அணியின் முதல் இன்னிங்சிஸ் முடிவடைந்த பின்னர் வெஸ்ட் இண்டீஸ் தனது 2வது இன்னிங்ஸ்க்கு தயாரான வேளையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மைதானத்தில் நடனம் ஆடினார்.

அவர் நடனம் ஆடிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com