ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டெஸ்ட்: வங்காளதேசம் முதல் இன்னிங்சில் 191 ரன்களில் ஆல் அவுட்

வங்காளதேசம் தரப்பில் அதிகபட்சமாக மொமினுல் ஹக் 56 ரன்கள் அடித்தார்.
image courtesy: twitter/@ICC
image courtesy: twitter/@ICC
Published on

சில்ஹெட்,

ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இதில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சில்ஹெட்டில் இன்று தொடங்கியது.

இதில் டாஸ் வென்று முதல் இன்னிங்சை தொடங்கிய வங்காளதேச அணி, ஜிம்பாப்வேயின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. தொடக்க ஆட்டக்காரர்கள் ஆன மக்முதுல் ஹசன் ஜாய் 14 ரன்களிலும், ஷாத்மன் இஸ்லாம் 12 ரன்களிலும் 12 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

இந்த இக்கட்டான சூழலில் இருந்து அணியை காப்பாற்ற மொமினுல் ஹக் மற்றும் கேப்டன் சாண்டோ போராடினர். அணியை ஒரளவு சரிவிலிருந்து மீட்ட இந்த ஜோடியில் சாண்டோ 40 ரன்களில் ஆட்டமிழந்தார். சிறிது நேரத்திலேயே அரைசதம் அடித்த மொமினுல் ஹக் 56 ரன்களில் ஆட்டமிழந்தார்.

பின்னர் களமிறங்கிய வீரர்களில் ஜேக்கர் அலி (28 ரன்கள்) தவிர மற்ற பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க வங்காளதேச அணி முதல் இன்னிங்சில் 191 ரன்களில் ஆல் அவுட் ஆனது. ஜிம்பாப்வே தரப்பில் வெல்லிங்டன் மசகட்சா மற்றும் முசரபானி தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய ஜிம்பாப்வே அணி முதல் நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 67 ரன்கள் அடித்துள்ளது. பிரையன் பென்னெட் 40 ரன்களுடனும், பென் கர்ரன் 17 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

ஜிம்பாப்வே அணி இன்னும் 124 ரன்கள் பின்தங்கியுள்ள நிலையில் நாளை 2-வது நாள் ஆட்டம் நடைபெற உள்ளது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com