டெஸ்ட் கிரிக்கெட்; வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய ஆஸ்திரேலியா

Image Courtesy: @ICC
இரு அணிகளுக்கும் இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி வரும் 12ம் தேதி ஜமைக்காவில் தொடங்குகிறது.
க்ரெனடா,
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலையில் இருந்தது.
இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான 2வது டெஸ்ட் போட்டி க்ரெனடாவில் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்சில் 286 ரன்னும், வெஸ்ட் இண்டீஸ் 253 ரன்னும் எடுத்தன.
இதையடுத்து 33 ரன் முன்னிலையுடன் தனது 2வது இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலியா 243 ரன்னில் ஆல் ஆனது. இதன் காரணமாக முன்னிலையுடன் சேர்த்து வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 277 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இந்த இலக்கை நோக்கி ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி தனது 2வது இன்னிங்சில் 143 ரன்னில் சுருண்டது.
இதன் மூலம் 133 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என கைப்பற்றியது. இரு அணிகளுக்கும் இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி வரும் 12ம் தேதி ஜமைக்காவில் தொடங்குகிறது.






