டெஸ்ட் கிரிக்கெட்: பாக்.ஜாம்பவான் வாசிம் அக்ரமின் வாழ்நாள் சாதனையை தகர்த்த பும்ரா

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் பும்ரா இதுவரை 3 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.
image courtesy:twitter/@BCCI
image courtesy:twitter/@BCCI
Published on

லீட்ஸ்,

இங்கிலாந்துக்கு சென்றுள்ள சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி லீட்சில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பீல்டிங்கை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 113 ஓவர்களில் 471 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது. இந்திய அணி தரப்பில் ஜெய்ஸ்வால் (101 ரன்கள்), கில் (147 ரன்கள்) மற்றும் ரிஷப் பண்ட் (134 ரன்கள்) சதம் விளாசினர். இங்கிலாந்து அணி தரப்பில் கேப்டன் பென் ஸ்டோக்ஸ், ஜோஷ் டாங்கு தலா 4 விக்கெட் சாய்த்தனர்.

இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 2-வது நாள் முடிவில் 3 விக்கெட்டுக்கு 209 ரன்கள் எடுத்தது. ஆலி போப் 100 ரன்களுடனும் (131 பந்து, 13 பவுண்டரி), ஹாரி புரூக் ரன் ஏதுமின்றியும் களத்தில் உள்ளனர். இந்திய தரப்பில் பும்ரா மட்டுமே 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். இன்று 3-வது நாள் ஆட்டம் நடைபெற உள்ளது.

டெஸ்ட் போட்டிகளில் இந்த ஆட்டத்தில் கைப்பற்றிய 3 விக்கெட்டுகளையும் சேர்த்து ஜஸ்பிரித் பும்ரா 'சேனா' நாடுகளில் (தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா) மட்டும் 148 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார்.

இதன் மூலம் 'சேனா' நாடுகளில் அதிக விக்கெட்டுகள் கைப்பற்றிய ஆசிய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இதற்கு முன்னர் பாகிஸ்தான் முன்னாள் ஜாம்பவான் வீரரான வாசிம் அக்ரம் 146 விக்கெட்டுகள் கைப்பற்றியிருந்ததே சாதனையாக இருந்தது. தற்போது அந்த சாதனையை முறியடித்துள்ள பும்ரா புதிய சாதனை படைத்துள்ளார்.

அந்த பட்டியல்:

1. ஜஸ்பிரித் பும்ரா - 148 விக்கெட்டுகள்

2. வாசிம் அக்ரம் - 146 விக்கெட்டுகள்

3. அனில் கும்ப்ளே - 141 விக்கெட்டுகள்

4. இஷாந்த் சர்மா - 130 விக்கெட்டுகள் 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com