டெஸ்ட் கிரிக்கெட்: இந்தியா-நியூசிலாந்து ‘ஏ’ ஆட்டம் டிரா

தொடர்ந்து ஆடிய இந்திய 'ஏ' அணி 123.1 ஓவர்களில் 516 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது.

டெஸ்ட் கிரிக்கெட்: இந்தியா-நியூசிலாந்து ‘ஏ’ ஆட்டம் டிரா
Published on: 

லின்கான்,

இந்தியா 'ஏ'- நியூசிலாந்து 'ஏ' அணிகள் இடையிலான அதிகாரபூர்வமற்ற முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி (4 நாள் ஆட்டம்) லின்கானில் கடந்த 24-ந் தேதி தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் இந்தியா 113 ரன்னும், நியூசிலாந்து 317 ரன்னும் எடுத்தன. 204 ரன் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய 'ஏ' அணி 3-வது நாள் முடிவில் 8 விக்கெட்டுக்கு 488 ரன்கள் எடுத்திருந்தது. 4-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நேற்று நடந்தது. தொடர்ந்து ஆடிய இந்திய 'ஏ' அணி 123.1 ஓவர்களில் 516 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது.

313 ரன்கள் இலக்கு

இதைத்தொடர்ந்து 313 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2-வது இன்னிங்சை ஆடிய நியூசிலாந்து 'ஏ' அணி யில் தொடக்க ஆட்டக்காரர் கர்டிஸ் ஹீபி (90 ரன், நாட்-அவுட்) நிலைத்து நின்று நேர்த்தியாக ஆடினாலும், மறுமுனை யில் விக்கெட்டுகள் வேகமாக சரிந்தன. அவருடன் இணைந்த டீன் பாக்ஸ்கிராப்ட் (42 ரன்) தவிர யாரும் தாக்குப்பிடிக்க வில்லை.

வெளிச்சமின்மை

கடும் குளிரும். பலத்த காற்றும் வீசிய சூழலில், 65 ஓவர்களில் நியூசிலாந்து 'ஏ' அணி 9 விக்கெட்டுக்கு 187 ரன்கள் எடுத்திருந்த போது போதிய வெளிச்சமின்மை காரணமாக ஆட்டத்தை கைவிடுவதாக நடுவர்கள் அறிவித்தனர். இதனால் ஆட்டம் 'டிரா' ஆனது. 17 ஓவர்கள் எஞ்சி இருந்த நிலையில் மோசமான வானிலையால் நியூசிலாந்து அணி தோல்வியில் இருந்து தப்பியது. இந்திய தரப்பில் ஆகிப் நபி 3 விக்கெட்டும், தேவ்தத் படிக்கல் 2 விக்கெட்டும் வீழ்த்தி னர்.

இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி கிறைஸ்ட்சர்ச்சில் வருகிற 31-ந் தேதி தொடங்குகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com