டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு விராட் கோலி தேவை - வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் வீரர்

விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற விரும்புவதாக தகவல் வெளியாகி உள்ளது.
 image courtesy:PTI
image courtesy:PTI
Published on

மும்பை,

இந்திய அணியின் சீனியர் வீரர் விராட் கோலி (வயது 36). இவர் இந்திய அணிக்காக இதுவரை 123 டெஸ்ட், 302 ஒருநாள் மற்றும் 125 டி20 போட்டிகளில் ஆடி உள்ளார். இந்திய அணி 2024 டி20 உலகக்கோப்பையை வென்ற பின்னர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்தார். தொடர்ந்து டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவேன் எனவும் கூறியிருந்தார்.

இந்திய அணி அடுத்த மாதம் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணி ரோகித் சர்மா தலைமையில் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்த்த நிலையில், கடந்த 7ம் தேதி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக ரோகித் சர்மா அறிவித்தார்.

இந்நிலையில், இந்திய சீனியர் வீரரான விராட் கோலியும் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற விருப்பம் தெரிவித்து பி.சி.சி.ஐ-யிடம் தனது கருத்தை கூறியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால், எதிர்வரும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை கருத்தில் கொண்டு ஓய்வு முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு விராட் கோலியிடம் பி.சி.சி.ஐ. வலியுறுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவிக்கப்பட்ட முடிவை இந்திய பேட்டிங் ஜாம்பவான் விராட் கோலி திரும்பப் பெற வேண்டும் என்று வெஸ்ட் இண்டீஸின் முன்னாள் ஜாம்பவான் பிரையன் லாரா வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டா பதிவில்,

டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு விராட் தேவை. அவர் நிச்சயம் சம்மதிப்பார். அவர் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறப் போவதில்லை. அவர் தனது டெஸ்ட் வாழ்க்கையின் மீதமுள்ள காலத்தில் நிச்சயம் 60 க்கு மேல் சராசரியான ரன்களை எடுப்பார் என பதிவிட்டுள்ளார். 

View this post on Instagram

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com