

கிங்ஸ்டன்,
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடந்து வரும் 2வது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணியின் பாவத் ஆலம் ஆட்டமிழக்காமல் 124 ரன்களை எடுத்து உள்ளார்.
இந்த போட்டியில், பாகிஸ்தான் அணியின் இடது கை ஆட்டக்காரரான பாவத் ஆலம் சதம் அடித்து புதிய சாதனை படைத்துள்ளார். அவர் தனது 22வது இன்னிங்சில் 5வது சதம் அடித்து உள்ளார். இதனால், விரைவாக 5 சதங்கனை அடித்த வீரர் என்ற பெருமையை பெற்று, முன்னாள் கேப்டன் யூனிஸ் கான் சாதனையை முறியடித்து உள்ளார்.
இதற்கு முன், யூனிஸ் தனது 28வது இன்னிங்சில் 5வது சதம் அடித்து இருந்தது சாதனையாக இருந்தது. அவருக்கு அடுத்து, சலீம் மாலிக் (29வது இன்னிங்ஸ்) உள்ளார்.