டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை: ஆப்கானிஸ்தான் கேப்டன் சாதனை

தவ்ஹித் ஹிரிடாய் 115 இடங்கள் எகிறி 60-வது இடத்தை பிடித்துள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை:  ஆப்கானிஸ்தான் கேப்டன்
சாதனை
Published on: 

துபாய்,

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது. பேட்டர்களின் தரவரிசையில் டாப்-5 இடங்களில் மாற்றமில்லை. இங்கிலாந்து வீரர் ஹாரி புரூக் முதலிடத்தி லும், ஜோ ரூட் 2-வது இடத்திலும், ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட் 3-வது இடத்திலும் தொடருகிறார்கள். ஆப்கானிஸ்தான் கேப்டன் ரஹ்மத் ஷா 6 இடங்கள் முன்னேறி 7-வது இடத்தை பிடித்து வரலாறு படைத்துள்ளார். டெஸ்டில் எந்த பிரிவிலும் சரி ஆப்கானிஸ்தான் வீரர் ஒருவர் டாப்-10 இடத்திற்குள் நுழைந்திருப்பது இதுவே முதல் முறையாகும். ஜிம்பாப்வேக்கு எதிரான முதலாவது டெஸ்டில் 173 ரன்கள் எடுத்ததன் மூலம் இந்த ஏற்றம் கிடைத்துள்ளது. தலா ஒரு இடம் சறுக்கிய இந்திய வீரர்களான ரிஷப் பண்ட் 8-வது இடத்திலும், சுப்மன் கில் 10-வது இடத்திலும் உள்ளனர். ஜெய்ஸ்வால் 13-வது இடம் வகிக்கிறார். வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான கடைசி டெஸ்டில் 242 ரன்கள் குவித்து சாதனை படைத்த வங்காளதேச வீரர் தவ்ஹித் ஹிரிடாய் 115 இடங்கள் எகிறி 60-வது இடத்தை பிடித்துள்ளார்.

ரஹ்மத் ஷா

பந்து வீச்சாளர் தரவரிசையில் முதல் 15 இடங்களில் மாற்றமில்லை. ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க் முதலிடத்தை தக்க வைத்துள்ளார். வங்காளதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மொத்தம் 16 விக்கெட்டுகள் கைப்பற்றிய வெஸ்ட் இண்டீஸ் சுழற்பந்து வீச்சாளர் ஜோமல் வாரிகன் 11 இடங்கள் உயர்ந்து 19-வது இடத்தை பெற்றுள்ளார்.

X