டெஸ்ட் கிரிக்கெட்: மோசமான சாதனை பட்டியலில் தோனி, விராட் கோலியை சமன் செய்த ரோகித்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் ரோகித் தலைமையிலான இந்தியா அணி தோல்வியடைந்தது.
அடிலெய்டு,
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் பெர்த்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.
இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் பகல்-இரவு போட்டியாக அடிலெய்டு மைதானத்தில் நடைபெற்றது. இதில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்துள்ளது.
முன்னதாக முதல் போட்டியில் தனிப்பட்ட காரணங்களுக்காக ரோகித் விலகிய நிலையில் கேப்டனாக செயல்பட்ட பும்ரா அணிக்கு வெற்றியை பெற்றுக்கொடுத்திருந்தார். தற்போது ரோகித் தலைமையில் இந்தியா தோல்வியை சந்தித்துள்ளது.
ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி தொடர்ச்சியாக சந்தித்த 4-வது தோல்வி இதுவாகும். இதற்கு முன்னர் சொந்த மண்ணில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 3-0 (3 போட்டிகள்) என்ற கணக்கில் இந்தியா இழந்திருந்தது.
இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் தொடர்ச்சியாக அதிக தோல்விகளை சந்தித்த இந்திய கேப்டன்களின் மோசமான சாதனை பட்டியலில் 3-வது இடம் பெற்றிருந்த விராட் கோலி, மகேந்திரசிங் தோனி ஆகியோரை சமன் செய்துள்ளார்.
அந்த பட்டியல்:-
1. மாக் பட்டோடி - 6 போட்டிகள்
2. சச்சின் - 5 போட்டிகள்
3. டாட்டா கெய்க்வாட்/ தோனி (2 முறை), விராட் கோலி, ரோகித் சர்மா - 4 போட்டிகள்