டெஸ்ட் கிரிக்கெட்; சேவாக்கின் வாழ்நாள் சாதனையை முறியடித்த டிம் சவுதி

இந்தியாவுக்கு வந்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது.
Image Courtesy: AFP
Image Courtesy: AFP
Published on

பெங்களூரு,

இந்தியாவுக்கு வந்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இதன்படி இந்தியா- நியூசிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி நடந்து வருகிறது. மழை காரணமான முதல் நாள் ஆட்டம் டாஸ் கூட போடப்படாமல் கைவிடப்பட்ட நிலையில், நேற்று 2-வது நாள் ஆட்டம் நடைபெற்றது.

அதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்தியா, நியூசிலாந்தின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 46 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து நேற்றைய 2ம் நாள் ஆட்ட நேர முடிவில், 3 விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் எடுத்தது.இன்று 3-ம் நாள் ஆட்டம் நடைபெற்று வருகிறது.

இதில் தொடர்ந்து பேட்டிங் செய்த நியூசிலாந்து தனது முதல் இன்னிங்சில் 402 ரன்கள் குவித்தது. நியூசிலாந்து தரப்பில் ரச்சின் ரவீந்திரா 134 ரன், கான்வே 91 ரன், டிம் சவுதி 65 ரன் எடுத்தனர். இதையடுத்து இந்திய அணி தனது 2வது இன்னிங்சை ஆடி வருகிறது. இந்நிலையில், இந்த ஆட்டத்தில் நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளரான டிம் சவுதி 4 சிக்ஸ் அடித்து அசத்தினார்.

இதன் மூலம் அவர் இந்திய முன்னாள் வீரரான சேவாக்கின் வாழ்நாள் சாதனை ஒன்றை முறியடித்துள்ளார். அதாவது சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சிக்ஸ் அடித்த வீரர்கள் பட்டியலில் சேவாக்கை (91 சிக்ஸ்), பின்னுக்கு தள்ளி டிம் சவுதி (93 சிக்ஸ்) 6வது இடத்திற்கு முன்னேறி உள்ளார்.

இந்த பட்டியலில் இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ் (131 சிக்ஸ்) முதல் இடத்திலும், நியூசிலாந்தின் பிரண்டன் மெக்கல்லம் (107 சிக்ஸ்) 2வது இடத்திலும், ஆஸ்திரேலியாவின் ஆடம் கில்கிறிஸ்ட் (100 சிக்ஸ்) 3வது இடத்திலும், வெஸ்ட் இண்டீசின் கிறிஸ் கெயில் (98 சிக்ஸ்) 4வது இடத்திலும், தென் ஆப்பிரிக்காவின் ஜேக் காலிஸ் (97 சிக்ஸ்) 5வது இடத்திலும் உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com