வங்காளதேசத்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்: பாகிஸ்தான் 386 ரன்களுக்கு ஆல்அவுட்

பாகிஸ்தான் அணி, 100.3 ஓவர்கள் விளையாடி 386 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
வங்காளதேசத்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்: பாகிஸ்தான் 386 ரன்களுக்கு ஆல்அவுட்
Published on

மிர்பூர்,

ஷான் மசூத் தலைமையிலான பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து அந்த நாட்டு அணிக்கு எதிராக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில் பாகிஸ்தான்-வங்காளதேசம் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மிர்புரில் நேற்று தொடங்கியது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி வங்காளதேச அணி முதலில் பேட்டிங் செய்தது. வங்காளதேச அணி, 117.1 ஓவர்கள் விளையாடி 413 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக நஜ்முல் ஹொசைன் நிலைத்து விளையாடி சதமடித்து அசத்தினார். அவர் 101 ரன்களில் ஆட்டமிழந்தார். முஷ்பிகுர் ரஹிம் 71 ரன்கள் எடுத்தார். பாகிஸ்தான் தரப்பில் முகமது அப்பாஸ் சிறப்பாக பந்து வீசி 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதையடுத்து தனது முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி, 100.3 ஓவர்கள் விளையாடி 386 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பாகிஸ்தான் தரப்பில் அசான் அவாய்ஸ் அதிகபட்சமாக 103 ரன்கள் எடுத்தார். வங்காளதேசம் தரப்பில் மஹதி ஹசன் மிராஸ் அதிகபட்சமாக 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதையடுத்து வங்காளதேச அணி தனது இரண்டாவது இன்னிங்சில் 2 விக்கெட்டுகளை இழந்து 53 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com