

மெல்போர்ன்,
வங்காளதேச கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, அந்நாட்டு அணிக்கு எதிராக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்த டெஸ்ட் தொடர் அடுத்த மாதம் 13-ந்தேதி தொடங்க உள்ளது. முதல் டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 13-ந்தேதி தொடங்கி 17-ந்தேதி வரை டார்வினில் உள்ள மராரா மைதானத்தில் நடைபெற உள்ளது. ரண்டாம் டெஸ்ட் ஆகஸ்ட் 22-ந்தேதி தொடங்கி 26-ந்தேதி வரை மெக்கேவில் கிரேட் பேரியர் ரீப் மைதானத்தில் நடைபெற உள்ளது.
2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ள ஆஸ்திரேலிய அணி வீரர்களின் பெயர்களை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. அதன் விபரம்;
பேட் கம்மின்ஸ் (கேப்டன்), ஸ்காட் போலண்ட், அலெக்ஸ் கேரி, கேமரூன் கிரீன், ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்லிஸ், மார்னஸ் லாபுஷேன், நாதன் லயன், ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், ஜேக் வெதரால்ட், பியூ வெப்ஸ்டர்.